×

பாஜ எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து தொடர்பான விசாரணை செப்.6க்கு ஒத்தி வைப்பு

புதுடெல்லி: பாஜ எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்களைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பிரிஜ் பூஷன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை தரவில்லை என சிறுமி ஒருவரின் தந்தை டெல்லி மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்தார்.

இதுதொடர்பான விசாரணையில் ஆஜரான சிறுமியும், அவரது தந்தையும் பூஷன் தொடர்பான விசாரணையில் திருப்தி அடைவதாகவும், அவர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய எந்த எதிர்ப்பும் இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரிய காவல்துறை அறிக்கையை ஏற்பது குறித்து செப்டம்பர் 6ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post பாஜ எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து தொடர்பான விசாரணை செப்.6க்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : POCSO ,BJP ,Brij Bhushan ,New Delhi ,
× RELATED ஆர்எல்டி பிரமுகர் கட்சிக்கு முழுக்கு